தரைப்பாலம் கட்டித்தர கோரிக்கை
புயல் கன மழையால் பாதிக்கப்பட்ட பாகூர் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட மின் சாதன பழுது, மின் கம்பங்கள் சேதங்கள் குறித்து விளக்கப்பட்டது. தொடர்ந்து, மத்திய குழுவில் உள்ள வேளாண் அதிகாரிகள் பொன்னுசாமி, பாலாஜி ஆகியோர் கொம்மத்தான்மேடு படுக்கை அணை உடைப்பை பார்வையிட்டனர். அப்போது, 5 ஆயிரம் கன அடிநீர் தாங்க கூடிய படுக்கை அணையில், 1.8 லட்சம் கன அடி நீர் வந்ததால் உடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தரைப்பாலத்தை நம்பி 10 கிராமங்கள் உள்ளது. அனைத்து கிராமத்திலும் 5 அடி உயரத்திற்கு தண்ணீர் புகுந்து விட்டது. கொம்மத்தன்மேடு மற்றும் கடலுார் கலெக்டர் அலுவலகத்தை இணைக்கும் தரைப்பாலம் சேதம் அடைந்துள்ளால் பல கி.மீ., சுற்றி செல்லும் நிலை உள்ளது. உடனடியாக படுக்கை அணையுடன் கூடிய தரைப்பாலத்தை கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மத்திய குழுவினரிடம் கோரிக்கை விடுத்தனர்.