மேலும் செய்திகள்
பதிவாளராக ஐ.ஏ.எஸ்., நியமிக்க வலியுறுத்தல்
27-Nov-2024
புதுச்சேரி: தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பதவியை உடனடியாக நிரப்ப கவர்னருக்கு, மாணவர், பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது . இதுகுறித்து சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன் அறிக்கை: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பதிவாளராக பணியாற்றி வந்த சிவராஜ் பதவி காலம் கடந்த 6ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால், காலியாக உள்ள பதிவாளர் பதவியை நிரப்ப, பல்கலைக்கழக மானியக் குழுவின் நெறிமுறைகளை பின்பற்றி வல்லுநர்களை கொண்ட தேர்வு குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். அந்த தேர்வு குழு மூலம் விருப்பம் மற்றும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் பதிவாளர் பதவியை உடனடியாக நிரம்பிட வேண்டும். மேலும், பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர்கள், துணை, இணை பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
27-Nov-2024