மேலும் செய்திகள்
மின் கட்டண உயர்வு: அமைச்சர் விளக்கம்
21-May-2025
புதுச்சேரி : கல்வி கட்டணக் குழுவை கூட்டி கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என சென்டாக் மாணவர் பெற்றோர் நலச் சங்கம் வலியுறுத்தி உள்ளது.இதுகுறித்து சங்க தலைவர் நாராயணசாமி, கவர்னர், முதல்வர், கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு: மாநிலத்தில் உயர் கல்வி படிப்புக்கான கட்டண நிர்ணயக் குழு தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணம்மாளை அரசு நியமித்து, கட்டணத்தை நிர்ணயித்து வருகிறது. தற்பொழுது 2025- 26ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதால் கல்வி கட்டண குழுவை உடனடியாக கூட்டி இந்த ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும், கட்டணக்குழு நிர்ணயிக்கும் தொகையை, தனியார் கல்வி நிறுவனங்கள் வசூலிக்கிறதா அல்லது கூடுதலாக வசூலிக்கிறதா என்பதை, குழு அமைத்து கண்காணித்திடவேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
21-May-2025