உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாசஞ்சர் ரயில் கூடுதலாக இயக்க கோரிக்கை

பாசஞ்சர் ரயில் கூடுதலாக இயக்க கோரிக்கை

புதுச்சேரி : புதுச்சேரி - விழுப்புரம் இடையே பாசஞ்சர் ரயிலை கூடுதலாக இயக்க, கவர்னரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி ரயில் பயணிகள் சங்க தலைவர் கருப்பசாமி, கவர்னரிடம் கொடுத்துள்ள மனு, புதுச்சேரி ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் துவங்கி ஓராண்டாகியும் பணிகள் முடியாமல் உள்ளது.தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயிலை, கடலுார் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி - விழுப்புரம் இடையே, ஒரு மணி நேர இடைவெளியில் பாசஞ்சர் ரயிலை இயக்க வேண்டும். வாரம் ஒரு நாள் இயக்கப்படும் யஷ்வந்த்பூர் ரயிலை தினமும் இயக்க வேண்டும். திருப்பதி, எஸ்பிரஸ் ரயிலை, வாரம் 3 முறை இயக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை