காரைக்கால் மீனவர்களை மீட்க கவர்னருக்கு கோரிக்கை
புதுச்சேரி: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும்மீட்க கவர்னர் கைலாஷ்நாதன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புதுச்சேரி மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியள்ளார்.அவரது அறிக்கை:காரைக்கால், கீழக்காசாகுடியைச் சார்ந்த 15 மீனவர்கள்,தமிழகத்தை சேர்ந்த 3 பேர் என, 18 மீனவர்களை கடந்த 2ம் தேதி இலங்கைக் கடற்படையினர் அத்துமீறி மீன்பிடித்ததாக கைது செய்து, 10 நாள் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.விசைப் படகு மற்றும் மீன்கள், வலைகளை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் காரைக்கால் மீனவர்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, கவர்னர் கைலாஷ்நாதன் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் பேசி 18 மீனவர்கள் மற்றும் படகை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.