உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மருந்து விநியோகம் தொடர்பான அரசாணை திரும்பபெற கோரிக்கை

மருந்து விநியோகம் தொடர்பான அரசாணை திரும்பபெற கோரிக்கை

புதுச்சேரி : வீடுகளுக்கு சென்று மருந்து விநியோகம் செய்ய மத்திய அரசு அறிவித்த அரசாணையை திரும்ப பெற வேண்டுமென, புதுச்சேரி மாநில மருந்து விற்பனையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.சங்கத்தின் தலைவர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனா தொற்று காலத்தில் அனைவருக்கும் மருந்து பொருட்கள் தடையின்றி கிடைக்க, பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று மருந்து விநியோகம் செய்ய மத்திய அரசு அரசாணை வெளியிட்டது.தற்போது, நோய் தொற்று முடிந்த நிலையில், ஆன்லைன் விற்பனை வாயிலாக இ-காமர்ஸ் நிறுவனங்கள் அந்த அரசாணையின் அடிப்படையில் தொடர்ந்து, மருந்து பொருட்களை விநியோகம் செய்து வருகின்றன.இதனால், மருத்துவர் பரிந்துரையின் பேரில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டிய மருந்துகள் மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையாக கூடிய மருந்துகள் இளைஞர்கள் மற்றும் சமூக விரோதிகளிடம் தங்கு தடையின்றி கிடைக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, அந்த அரசாணையை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !