உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரிக்கு மீண்டும் விமான சேவை: வீரராகு வலியுறுத்தல்

புதுச்சேரிக்கு மீண்டும் விமான சேவை: வீரராகு வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரியில் மீண்டும் விமான சேவையை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு அருண் சர்மா தொண்டு நிறுவனத் தலைவர் வீரராகு கோரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி மற்றும் பெங்களூர், ஹைதராபாத் இடையே இயக்கப்பட்ட விமான சேவை மார்ச் 31 முதல் முற்றிலும் நிறுத்தப்படும் என ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத், பெங்களூர் நகரங்களுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மட்டுமே விமானம் இயக்கியது. இப்போது அந்த நிறுவனமும் சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதனால் புதுச்சேரியின் சுற்றுலா வளர்ச்சி, பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படும். மேலும் மருத்துவ காரணங்களுக்காக வருவோரும் உடனடியாக வர முடியாமல் தவிப்பர். விமான நிலையத்தால் ஏற்பட்டுள்ள நேரடி மறைமுக வேலைவாய்ப்புகள் அதனால் பலரது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் கவர்னர் தமிழிசை விமான சேவையை மீண்டும் தொடர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அதே போல விமான சேவையை மீண்டும் தொடர புதுச்சேரி அரசும் மத்திய அரசுக்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை