உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  லட்சுமி ஹயக்ரீவ பெருமாள் கோவிலில் இன்று முதல் திருப்பாவை உபன்யாசம் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்

 லட்சுமி ஹயக்ரீவ பெருமாள் கோவிலில் இன்று முதல் திருப்பாவை உபன்யாசம் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்

புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவ பெருமாள் கோவிலில் மார்கழி மகோற்சவ திருப்பாவை உபன்யாசம் இன்று துவங்குகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் தினமும் உபன்யாசம் செய்கிறார். மாதங்களின் மார்கழி மாதம், தேவர்களின் மாதமாகக் கருதப்படுகிறது. இம்மாதம் விரதங்கள், பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகளுக்கு உகந்த மாதமாகவும் உள்ளது. இந்த மாதத்தில் வீதிதோறும் பக்திப் பாடல்களைப் பரவசமாக பாடி இறைவனை வழிபட்டு தெய்வீக அனுபவத்தைப் பெறுகின்றனர். மார்கழி மாதத்தையொட்டி புதுச்சேரி கோவில்களிலும் சிறப்பு பூஜைகள், உபன்யாசத்திற்கு ஏற்பாடுகள் செய்து வருகின்றது. அதன்படி, முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் எழுந்தருளி உள்ள லட்சுமி ஹயக்ரீவ பெருமாள் கோவிலில் மார்கழி மகோற்சவ உபன்யாசம் இன்று 16ம் தேதி விமர்சையா க துவங்குகிறது. அடுத்த மாதம் 14ம் தேதி வரை தொடர்ந்து இந்த மார்கழி மகோற்சவ உபன்யாசம் நடக்கின்றது. இந்நாட்களில் தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரை ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் தினமும் உபன்யாசம் செய்கிறார். பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களின் ஒருவரான ஆண்டாள் அருளிய திருப்பாவை குறித்து ராமபத்ர தாதம் தினமும் உபன்யாசம் செய்கிறார். பெருமாள் மீது கொண்ட ஆண்டாளின் ஆழ்ந்த பக்தி, ஆண்டாளின் தனித்துவம், தமிழ் இலக்கியத்தின் செழுமை, அறிவியல் பூர்வமான நுண்ணறிவை திருப்பாவை வெளிப்படுத்துகிறது. திருப்பாவை உபன்யாசம் கேட்பவர்களுக்கு மன அமைதியையும், இறைவனிடம் பற்றையும் அதிகரிக்க உதவுகிறது. மார்கழி மாதத்தில் ஹயக்ரீவ பெருமானை தரிசனம் செய்வதோடு, உபன்யாசமும் கேட்டு, பக்தி மார்க்கத்தில் ஐக்கியமாகலாம். ஏற்பாடுகளை ஹயக்ரீவப் பெருமான் தேவஸ்தான தனி அதிகாரி, வேத ஆகம சம்ரக் ஷண சரஸ் மாருதி ட்ரஸ்ட் நிர்வாகிகள் இணைந்து செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை