மேலும் செய்திகள்
தொழிலாளியை கத்தியால் குத்தியவர் கைது
26-Jul-2025
புதுச்சேரி : ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியையிடம், பேத்திக்கு அரசு வேலை வாங்கி வருவதாக 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி, தாகூர் நகரைச் சேர்ந்தவர் மனோரஞ்சிதம், 70; ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை. இவருக்கு, தனது தோழியின் மூலம் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, முட்டுச்சந்து, பர்மா காலனியை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவர் அறிமுகமாகியுள்ளார். பின் அவர், தேவகோட்டையில் உள்ள ஆனந்தா கல்லுாரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய, மனோரஞ்சிதம், முதுகலை பட்டதாரியான தனது பேத்திக்கு கல்லுாரியில் அரசு வேலை வாங்கித் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு, ஆரோக்கியசாமி, 25 லட்சம் ரூபாய் செலவாகும் என கூறியுள்ளார். இதையடுத்து, மனோரஞ்சிதம் பல்வேறு தவணைகளாக ஆரோக்கியசாமியிடம் 25 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால், அரசு வேலை வாங்கி தரவில்லை. கொடுத்த பணத்தை மனோரஞ்சிதம் திரும்ப கேட்டபோது, ஆரோக்கியசாமி தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மனோரஞ்சிதம் அளித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
26-Jul-2025