உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலை பாதுகாப்பு விழா நல்லவாடு பள்ளிக்கு பரிசு

சாலை பாதுகாப்பு விழா நல்லவாடு பள்ளிக்கு பரிசு

புதுச்சேரி: அரசு போக்குவரத்து துறை சார்பில், சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, நடந்த விழாவில், சிறப்பு பிரிவில் தேர்வு செய்யப்பட்ட நல்லவாடு அரசு நடுநிலைப் பள்ளிக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு போக்குவரத்து துறை சார்பில், 35வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா நடத்தப்பட்டது. விழாவில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில், சிறப்பு பிரிவில், தவளக்குப்பம் அருகே உள்ள நல்லவாடு அரசு நடுநிலைப்பள்ளிக்கு பரிசு வழங்கப்பட்டது. இப்பள்ளி 8ம் வகுப்பு மாணவி கிரேஷி, சுலோகம் எழுதும் போட்டியில் முதல் பரிசு பெற்றார்.பரிசு மற்றும் சான்றிதழை முதல்வர் ரங்கசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் ராமலிங்கத்திடம் வழங்கினார். நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., போக்குவரத்து துறை செயலர் முத்தம்மா, போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்