சாலை பணி துவக்கி வைப்பு
அரியாங்குப்பம் மணவெளி தொகுதியில் 72.27 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை, சபாநாயகர் துவக்கி வைத்தார். நோணாங்குப்பம் கிழக்கு ஆற்றங்கரை சாலை, குறுக்கு வீதிகளுக்கு சாலை மற்றும் வடிகால் வசதி அமைக்க அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், 33.05 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இப்பணிகளை சபாநாயகர் செல்வம் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையர் ரமேஷ் முன்னிலை வகித்தார். உதவி பொறியாளர் நாகராஜன், இளநிலை பொறியாளர் சுரேஷ், பா.ஜ., நிர்வாகிகள் நடராஜ், சக்திவேல், பிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.