உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலைப் பணி எம்.எல்.ஏ., ஆய்வு

சாலைப் பணி எம்.எல்.ஏ., ஆய்வு

புதுச்சேரி:வாணரப்பேட்டை, ஜெயராம் செட்டியார் தோட்டத்தில் சாலை மற்றும் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணியினை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பார்வையிட்டார்.உப்பளம் தொகுதி வாணரப்பேட்டை, ஜெயராம் செட்டியார் தோட்டத்தில், புதுச்சேரி நகராட்சி மூலம் 43 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் மேம்படுத்தும் பணிகள் துவங்கப்பட்டு, நடந்து வருகிறது.இப்பணியினை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். ஆய்வின் போது, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரை அறிவுறுத்தினார். நகராட்சி உதவி பொறியாளர் யுவராஜ், பணி ஆய்வாளர் ரவிச்சந்திரன், தி.மு.க., தொகுதி அவை தலைவர் ஹரிகிருஷ்ணன், துணை செயலாளர் ராஜி, மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி