உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரூ. 19.77லட்சத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி

ரூ. 19.77லட்சத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி

புதுச்சேரி: உழவர்கரை தொகுதி, ரெட்டியார்பாளையம் புதுநகர் மற்றும் அதனையெட்டியுள்ள 6வது குறுக்கு தெருவில்,19.77 லட்சம் ரூபாய் மதிப்பில், பழுதடைந்த வீட்டு சேவை குடிநீர் இணைப்பு குழாய்கள் மாற்றி அமைக்கும் பணியை, சிவசங்கர் எம்.எல்.ஏ., நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பா.ஜ., பொதுச்செயலாளர் சரவணன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம்,கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, பொது சுகாதார கோட்டம் செயற்பொறியாளர் வாசு, உதவி பொறியாளர் அன்பரசன், இளநிலை பொறியாளர் ரமேஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து, நீர்பாசன கோட்டம் பொதுப்பணித்துறை சார்பில், ரெட்டியார்பாளையம் மேட்டுவாய்க்கால் அருகே மரியாள் நகர் 2வது தெரு முதல் சிவகாமி நகர் 5வது குறுக்கு தெரு வரை, 21.56 லட்சம் ரூபாய் மதிப்பில், சிமெண்ட் சிலாப் அமைக்கும் பணியை, எம்.எல்.ஏ.,துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !