| ADDED : நவ 16, 2025 04:07 AM
அரியாங்குப்பம்: வீராம்பட்டினத்தில், 2 கோடி ரூபாயில் மீன் வலை பின்னும் கூடம் கட்டுவதற்கான இடத்தை அதிகாரிகள் தேர்வு செய்தனர். வீராம்பட்டினம் கிராமத்தில், மீன் வலை பின்னும் கூடம் இல்லை. மீனவர்கள் தொகுதி எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர். அவரது பரிந்துரையின் பேரில், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை 2 கோடி ரூபாய் மதிப்பில், 3 மீன் வலை பின்னும் கூடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தது. அதையடுத்து, பாஸ்கர் எம்.எல்.ஏ., முன்னிலையில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குனர் தெய்வசிகாமணி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சந்திரகுமார் நேற்று வீராம்பட்டினம் கடற்கரையில், கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்தனர். வி.ஏ.ஓ., மதன், சர்வேயர் சத்தியநாதன், மக்கள் குழு தலைவர் விஸ்வநாதன் உட்பட பலர் உடனிருந்தனர்.