மேலும் செய்திகள்
உண்டியல் திருட்டு
05-Mar-2025
புதுச்சேரி: உருளையன்பேட்டையில் மாற்றுத்திறனாளியின் பணத்தை திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, உருளையன்பேட்டையை சேர்ந்தவர் அந்தோணி ரமேஷ், 68; மாற்றுத்திறனாளியான இவர் தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார்.இந்நிலையில், கடந்த 25ம் தேதி இவரது வீட்டில் வைத்திருந்த மணிபர்ஸ் திடீரென மாயமானது. இதையடுத்து, அந்தோனி ரமேஷ் மணிபர்சை தேடியபோது, வீட்டின் வெளியே வாசலில் கிடந்துள்ளது.பின்னர், மணிபர்சை எடுத்து பார்த்தபோது, அதிலிருந்த ரூ. 21 ஆயிரம் பணம் மட்டும் திருடு போய் இருந்தது.இதுகுறித்து அந்தோணி ரமேஷ் அளித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, வீட்டில் இருந்த மணிபர்சை திருடி, பணத்தை எடுத்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
05-Mar-2025