உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரூ. 25 லட்சத்தில் போர்வெல் பணி அமைச்சர் துவக்கி வைப்பு

ரூ. 25 லட்சத்தில் போர்வெல் பணி அமைச்சர் துவக்கி வைப்பு

புதுச்சேரி: வடமங்கலம் கிராமத்தில் 25.40 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆழ்துளைக்கிணறு அமைக்கும் பணியை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து, மங்கலம் சட்டசபை தொகுதி, வடமங்கலம் கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க, மகா காளீஸ்வரர் நகரில் பொதுப்பணித்துறை சார்பில், 25.40 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆழ்துளைக்கிணறு அமைக்கப்பட உள்ளது. இப்பணியை, வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் உமாபதி, கிராம குடிநீர்த்திட்ட உதவிப்பொறியாளர் பீனாராணி, இளநிலை பொறியாளர் சுதர்சனம், வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், உதவிப்பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலைப் பொறியாளர் ரங்கமணிணார் உட்பட பலர் பங்கேற்றனர்.இத்திட்டத்தின் மூலம் வடமங்கலம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 3 ஆயிரம் பேர் பயனடைவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ