உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  டில்லியில் இடம் வாங்கியதில் ரூ. 4.94 கோடி மோசடி: மகன் மீது தந்தை போலீசில் புகார்

 டில்லியில் இடம் வாங்கியதில் ரூ. 4.94 கோடி மோசடி: மகன் மீது தந்தை போலீசில் புகார்

புதுச்சேரி: டில்லியில், இடம் வாங்கியதில் ரூ.4.94 கோடி மோசடி செய்துவிட்டதாக, மகன் மீது தந்தை, சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் அளித்துள்ளார். புதுச்சேரி, மேட்டுப்பாளையம் பிப்டிக் தொழிற்பேட்டையில், வெல்கார்டு கம்போனண்ட்ஸ் என்ற நிறுவனம் உள்ளது. அதன் மேலாண் இயக்குநராக பிரசன்னா பூட்டோரியா, 60; உள்ளார். இவரது மகன் ரங்கிட் பூட்டோரியா, அதே நிறுவனத்தில் இயக்குநராக உள்ளதுடன், டில்லியில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 18ம் தேதி, டில்லி நொய்டாவில், வெல்கார்டு கம்போனண்ட்ஸ் நிறுவனம் பெயரில் சொத்து வாங்குவதற்கு, பிரசன்னா தனது மகனுக்கு பல்வேறு தவணைகளாக 4 கோடியே 94 லட்சம் அனுப்பியுள்ளார். ஆனால் அவர், நிறுவனம் பெயரில் சொத்தை பதிவு செய்யாமல், தனது பெயரில் மோசடியாக பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதையறிந்த பிரசன்னா, நிறு வன த்தின் பணத்தில் தனது பெயரில் சொத்து வாங்கியதாக, மகன் ரங்கிட் மீது புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி., போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ