உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 63 பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்பு நிதி

63 பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்பு நிதி

திருபுவனை :பெண் குழந்தைகளுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வைப்பு நிதிக்கான வங்கி கணக்கு புத்தகங்களை அங்காளன் எம்.எல்.ஏ., வழங்கினார். புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் சார்பில், திருபுவனையை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்பு நிதி வங்கி கணக்கு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி, நடந்தது. மதகடிப்பட்டில் உள்ள திருபுவனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ., அங்காளன் தலைமை தாங்கி, 63 பெண் குழந்தைகளின் பெயரில், தலா ரூ. 50 ஆயிரம் வைப்பு நிதிக்கான வங்கி கணக்கு புத்தகங்களை வழங்கி பேசினார். நிகழ்ச்சிக்கு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை துணை இயக்குனர் ஜெயப்பிரியா முன்னிலை வகித்தார். நல ஆய்வாளர் நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை