உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் 3 பேரிடம் ரூ. 57.500 அபேஸ்

புதுச்சேரியில் 3 பேரிடம் ரூ. 57.500 அபேஸ்

புதுச்சேரி : புதுச்சேரியில் 3 பேரிடம் 57 ஆயிரத்து 500 ரூபாயை மர்மநபர்கள் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.மாகி பள்ளூரை சேர்ந்தவர் சனா ெஷரின். இவரது வாட்ஸ் ஆப்பிற்கு வந்த, லிங்க் மூலம் கே.ஒய்.சி.,யை அப்டேட் செய்துள்ளார். அடுத்த நிமிடம் அவரது வங்கி கணக்கில் இருந்து, 36 ஆயிரம் ரூபாயை சைபர் கிரைம் குற்றவாளிகள் எடுத்தனர்.இதேபோன்று, தவளக்குப்பத்தை சேர்ந்த லோகேஷ் என்பவர், கேமரா வாங்குவதற்கு, ஆன்லைனில் 19 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார். அரியாங்குப்பத்தை சேர்ந்த தினேஷ்ராஜ் என்பவரை, இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்ட மர்மநபர் பகுதி நேர வேலை இருப்பதாக, பேசினார். அதன்பேரில், டாஸ்க் முடிக்க 2 ஆயிரத்து 500 ரூபாயை அனுப்பி ஏமாந்தார்.புகார்களின்பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மர்மநபர்களை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை