உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 5 பேரிடம் ரூ. 76 ஆயிரம் அபேஸ்

5 பேரிடம் ரூ. 76 ஆயிரம் அபேஸ்

புதுச்சேரி : புதுச்சேரியில் 5 பேரிடம் 76 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.திலாசுப்பேட்டையை சேர்ந்த நபர், இவர் தனது வாட்ஸ் ஆப்பில் பி.எம். கிஷன் யோஜனா என்ற பெயரில் வந்த லிங்கை கிளிக் செய்தார். அதில் வங்கி விபரங்களை பதிவு செய்தார். சில நிமிடத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து 45 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டது.இவரை தொடர்ந்து, லாஸ்பேட்டையை சேர்ந்த நபர் ஒருவர், பேஸ் புக் மூலம், வந்த விளம்பரத்தில் மர பொருட்களை, 18 ஆயிரம் ரூபாய்க்கு ஆர்டர் செய்தார். பல நாட்கள் ஆகியும் பொருட்கள் வரவில்லை. பிறகுதான் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது.மேலும், வில்லியனுார் சேர்ந்த நபர் 1,500, உழவர்கரையை சேர்ந்த நபர் ஒருவர் 3,000, லாஸ்பேட்டை சேர்ந்த நபர் 9,000, என ஐந்து பேர் 76 ஆயிரம் ரூபாய் அனுப்பி மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர்.புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி