உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 5 பேரிடம் ரூ.83 ஆயிரம் அபேஸ்

5 பேரிடம் ரூ.83 ஆயிரம் அபேஸ்

புதுச்சேரி, : புதுச்சேரியில், 5 பேரிடம் 83 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர். ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவரிடம் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என, மர்ம நபர் தொடர்பு கொண்டு பேசினார். அதை நம்பி, அவர் 37 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார். மதகடிப்பட்டை சேர்ந்த பெண் ஒருவரிடம் 8 ஆயிரம், உழவர்கரை பகுதியை சேர்ந்த நபரிடம் 15 ஆயிரம், கருவடிக்குப்பத்தை சேர்ந்த நபரிடம் 3 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். ஆலக்குப்பத்தை சேர்ந்த ஒரு நபரின் ஏ.டி.எம்., கார்டு தொலைந்து விட்டது. அந்த கார்டை பயன்படுத்தி, விருதுநகரில் உள்ள ஏ.டி.எம்., மூலம் 20 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது. இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை