மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
13 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
13 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
14 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
14 hour(s) ago
புதுச்சேரி : சலங்கை பூஜையில் தனியாகவும், குழுவாகவும் மேடையேறிய மாணவிகள் பரதநாட்டிய அபிநயங்களால் அனைவரையும் கவர்ந்தனர்.புதுச்சேரி அரவிந்தர் வீதியில் உள்ள பரத கலா மண்டலம் சார்பில், சலங்கை பூஜை கம்பன் கலையரங்கில் நேற்று நடந்தது. புஷ்பாஞ்சலியுடன் துவங்கிய சலங்கை பூஜையில் தனி நபராகவும், குழுவாகவும் மேடையேறிய மாணவிகள் பரதநாட்டியம் ஆடி அசத்தினர்.லாஸ்பேட்டை குளூனி மேல்நிலைப் பள்ளி 8ம் வகுப்பு மாணவி லக்ஷனா, மாருதி பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி சிவகலை, வாசவி இண்டர்நேஷனல் எட்டாம் வகுப்பு மாணவி பிரணவி, ஏழாம் வகுப்பு மாணவி அபூர்வா, ஏகலைவா பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி கவிஸ்ரீ, அமலோற்பவம் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி அனுஸ்ரீ ஆகியோர் பரத நாட்டிய அபிநயங்களால் கவர்ந்தனர்.நிகழ்ச்சியில் பக்தன் - நட்டுவாங்கம், சூசைராஜ் - வாய்ப்பாட்டு, அங்கப்பன் - மிருதங்கம், சரவணன் - வயலின், பரணி - புல்லாங்குழல் வாசித்தனர். கவுரவ விருந்தினராக திருமுறை மற்றும் நடனத்திற்கான தில்லை அம்பலம் அறக்கட்டளை தலைவர் வடிவேலு, சிறப்பு விருந்தினர்களாக ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை நிறுவனர் முருகேசன், துணைத் தலைவர் சத்தியவேணி முருகேசன் பங்கேற்று, வாழ்த்தி பேசினர்.நிகழ்ச்சியில் கமலிபாலா, மணியன், நாராயணன் சங்கர், தனசேகர், பிரகாஷ் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை பரத கலா மண்டல நிர்வாகிகள் செய்திருந்தனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago