மேலும் செய்திகள்
வரும் 5ல் டாஸ்மாக் கடை விடுமுறை
03-Sep-2025
புதுச்சேரி : புதுச்சேரியில், மிலாடி நபியையொட்டி நாளை மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் செய்திக்குறிப்பு; நாளை 5ம் தேதி மிலாடி நபியையொட்டி, புதுச்சேரி, காரைக்கால் மாகி, ஏனாம் பகுதிகளில் அனைத்து வகை மதுக்கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்று அனைத்து மதுக் கடைகளிலும் மது விற்க தடை செய்யப்படுகிறது. மீறுபவர்கள் மீது கலால் சட்ட விதிகள் 1970ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.
03-Sep-2025