உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  புதுச்சேரியில் கோலமாவு விற்பனை அமோகம் 

 புதுச்சேரியில் கோலமாவு விற்பனை அமோகம் 

புதுச்சேரி: தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் சிறப்பு வாய்ந்தவை. அந்த வகையில், மார்கழி மாதம் முழுதும் பெண்கள் அதிகாலையில் வீட்டு வாசலில் பல வண்ணங்களில் கோலம் போட்டு, மகா விஷ்ணுவுக்கு விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். மேலும், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. அதன்படி, வரும் 16ம் தேதி, மார்கழி மாதம் துவங்குவதால், புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள கடைகள், தற்காலிக கடைகளில் பல வண்ணங்களில் கோலமாவு விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு பாக்கெட் கோலமாவு, 15 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பெண்கள் பலரும் கோலமாவு பாக்கெட்டுகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை