மேலும் செய்திகள்
குடும்ப தகராறு பெண் தற்கொலை
07-Jul-2025
புதுச்சேரி : குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால், கணவர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரியதர்ஷினி நகர், குடியிருப்பை சேர்ந்தவர் சிவா, 23; தனியார் நிறுவன சேல்ஸ்மேனாக பணியாற்றி வந்தார். இவர், புவனேஸ்வரி என்பவரை கடந்த 11 மாதத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்துள்ளார். குடிப்பழக்கம் உடைய சிவா, தினமும் இரவு வீட்டிற்கு குடிபோதையில் வந்ததால், கடந்த 17 ம் தேதி கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், புவனேஸ்வரி கோபித்து கொண்டு, தனது சின்ன மாமியார் வீட்டில் வந்து தங்கியுள்ளார். இதனால், மனமுடைந்த சிவா நேற்று முன்தினம் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புவனேஸ்வரி புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
07-Jul-2025