உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மணல் திருட்டு; தாசில்தார் ஆய்வு 

மணல் திருட்டு; தாசில்தார் ஆய்வு 

பாகூர் : பாகூர் தாசில்தார் கோபாலக்கிருஷ்ணன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் அதிகாரி கள் நேற்று அதிகாலை நெட்டப்பாக்கம் அடுத்த பண்டசோழநல்லுார் மலட்டாற்றில் ஆய்வு செய்தனர்.அங்கு இரண்டு மாட்டு வண்டிகளில் திருட்டுத் தனமாக மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் அதிகாரிகளை கண்டதும் தப்பியோடினர்.இதையடுத்து, மணல் கொள்ளைக்கு பயன்படுத்திய மண்வெட்டி உள்ளிட்ட பொருட்களை வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தப்பியோடிய நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை