உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / துப்புரவு தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்

துப்புரவு தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்

பாகூர்: நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கிட கோரி, பாகூரில் துப்புரவு தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமங்களில் தனியார் நிறுவனம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனம் மூலமாக ஒப்பந்த ஊழியர்கள் துப்புரவு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், துப்புரவு தொழிலாளர்கள் தங்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கிட கோரி நேற்று காலை பணிகளை புறக்கணித்து, பாகூர் சிவன் கோவில் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த பாகூர் போலீசார் மற்றும் ஒப்பந்த நிறுவன மேற்பார்வையாளர் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை ஏற்று தொழிலாளர்கள், மறியல் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை