| ADDED : ஜன 21, 2024 04:20 AM
சபரிமலையில் இந்தாண்டு பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து இருந்தாலும், புதுச்சேரியில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் கூட்டம் குறையவில்லை. கூலி தொழிலாளி முதல் அரசு அதிகாரிகள் வரை பல்வேறு தரப்பினரும் கார்த்திகை மாதம் மாலை அணிந்து, விரதம் இருந்து சபரிமலை செல்கின்றனர்.புதுச்சேரி போலீஸ் துறையிலும் கான்ஸ்டபிள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை பலர் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை சென்றனர். கிராமப்புற எல்லையோர போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் கடந்த வாரம் சபரிமலை ஜோதிதரிசனம் செய்ய மாலை அணிந்து விரதம் இருந்தனர்.தனித்தனியாக சபரிமலை செல்ல சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியான எஸ்.பி.,யை சந்தித்து விடுமுறை கேட்டனர். அதற்கு, 'சபரிமலைக்கு செல்ல விடுமுறை அளிக்க முடியாது; அடுத்து ஆண்டு செல்லுங்கள்' என, கூறி விடுமுறை தர மறுத்துவிட்டார். இதனால் வேறு வழியின்றி இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், காவலர்கள் விரத மாலையை கழற்றி வைத்து விட்டு தினசரி வேலையை துவக்கினர். இது, சக போலீசார் மத்தியில் எஸ்.பி., மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.