உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

புதுச்சேரி: லிங்காரெட்டிப்பாளையம் பாண்கோஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.  பள்ளியின் துணை முதல்வர் கோசலை தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் சசிகலா வரவேற்றார். காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஸ்டெல்லா மேரி கண்காட்சியைத் துவக்கி வைத்து பார்வையிட்டு, மாணவர்களின் சிறந்த அறிவியல் படைப்புகள் தேர்வு செய்தார். கண்காட்சியில் மாணவர்களின் 100க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. மின்சாரச் சேமிப்பு, வெள்ளப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை, கம்பியில்லா மின்சாரம் கடத்தல், அடர்த்தி ஒப்பீடு, சாலைப் பாதுகாப்பு, குடிநீர் சுத்தீகரிப்பு, நவீன குப்பைத்தொட்டி மற்றும் கணிதச் சூத்திர விளக்கங்கள் உள்ளிட்ட அறிவியல் படைப்புகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. கண்காட்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டு மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டனர்.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை