மேலும் செய்திகள்
திருபுவனை பள்ளியில் அறிவியல் கண்காட்சி
02-Oct-2024
புதுச்சேரி: புதுச்சேரி பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளியில் 178வது அறிவியல் கண்காட்சி நடந்தது.பள்ளி முதல்வர் தேவதாஸ் தலைமை தாங்கினார். மகாத்மா காந்தி பல் மருத்துவ கல்லுாரி முதல்வர் கென்னடி பாபு கண்காட்சியை துவக்கி வைத்தார். கண்காட்சியில் 300க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை மாணவர்கள் காட்சிக்கு வைத்திருந்தனர். இது தவிர மெகா 20 படைப்புகள் இடம் பெற்றிருந்தன.அறிவியல், தமிழ், கணிதம், கணினி அறிவியல், சமூக அறிவியல் என பல்வேறு அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்ட படைப்புகள் அனைவரையும் கவர்ந்தது. கண்காட்சியை மாணவர்கள், பெற்றோர்கள் பார்வையிட்டனர்.சிறந்த அறிவியல் படைப்புகளுக்கு பள்ளி முதல்வர் தேவதாஸ் பரிசு வழங்கி பாராட்டினார். ஏற்பாடுகளை அறிவியல் துறை தலைவர்கள், ஆசிரியர்கள் செய்திருந்தனர். பள்ளி துணை முதல்வர் சின்னப்பன் நன்றி கூறினார்.
02-Oct-2024