விமான நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை
புதுச்சேரி : லாஸ்பேட்டை விமான நிலையத்தில் வெடிகுண்டு பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.இந்திய விமான நிலைய ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, ஒவ்வொரு ஆண்டும் விமான நிலையங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. செப்., மாத இறுதியில் வெடிகுண்டு மிரட்டல் பாதுகாப்பு ஒத்திகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று காலை 11:00 மணிக்கு, விமான நிலையத்திற்கு போன் செய்து வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்தது. தயார் நிலையில் இருந்த மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் விமான நிலையத்தில் வரவேற்பு அறை, டிக்கெட் கவுன்டர், பயணி கள் அறை அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர். அப்போது, மோப்ப நாய் மூலம் மர்ம பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.அதனை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று போலீசார் வெடிக்க செய்தனர்.