நாட்டுப்புறவியல் இலக்கியங்கள் மீட்டுருவாக்கம் கருத்தரங்கு
புதுச்சேரி: புதுச்சேரி கலை பண்பாட்டுத்துறை தமிழ் வளர்ச்சிச் சிறகம் சார்பில், நாட்டுப்புறவியல் இலக்கியங்கள் மீட்டுருவாக்கம் என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் நடந்தது. லாஸ்பேட்டை, மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த கருத்தரங்கத்திற்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சிச் சிறகம் சிறப்புப்பணி அதிகாரி வாசுகி ராஜாராம் வரவேற்றார். தமிழ்ச்சங்க பொருளாளர் அருள்செல்வம், வழக்கறிஞர் கோவிந்தராஜ், படைப்பாளர் பிரபஞ்சன், தமிழ்நாடு புலவர் பேரவை ராமதாஸ் காந்தி வாழ்த்தி பேசினர். அரசு செய்தி மற்றம் விளம்பரத்துறை, மக்கள் தொடர்பு அதிகாரி அமலோற்பவமேரிக்கு, 'சிறந்த தமிழ் உச்சரிப்புக்கான விருது' வழங்கப்பட்டது. காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு ஆய்வு நிறுவன தமிழ்த்துறை தலைவர் கிருஷ்ணக்குமார் நன்றி கூறினார். முனைவர் குப்புசாமி தொகுத்து வழங்கினார்.