ராஜிவ்காந்தி மருத்துவமனையில் தொடர் மருத்துவ கருத்தரங்கம்
புதுச்சேரி: ராஜிவ் காந்தி அரசு மகளிர் குழந்தைகள் மருத்துவமனையில் உலக மெனோபாஸ் தினத்தையொட்டி, தொடர் மருத்துவ கருத்தரங்கம் நடந்தது.மருத்துவ கண்காணிப்பாளர் அய்யப்பன் தலைமை தாங்கி, பேசுகையில், 'ராஜிவ் காந்தி அரசு மகளிர், குழந்தைகள் மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட மருத்துவ சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது. மகளிருக்கு தேவைப்படும் அனைத்து வகை சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது. அவசர கால சூழ்நிலையை எதிர்கொள்ள விழிப்புணர்வு பயிற்சி பெறுவதன் மூலம் மேம்படுத்த சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும்' என்றார்.தொடர்ந்து கருப்பை ரத்த போக்கு, கருப்பை வாய் புற்றுநோய் சோதனை குறித்து கலந்துரையாடல் நடந்தது. துறை சார்ந்த டாக்டர்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். மேலும் மருத்துவமனையில் 40 வயதிற்குள்பட்ட ஆண்கள், பெண்களுக்கு எலும்பு தாது அடர்த்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ரொசாரியா, மக்கள் தொடர்பு அதிகாரி குருபிரசாத், அனைத்து துறை தலைவர்கள், மருத்துவ அதிகாரிகள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.