உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சர்வீஸ் சாலை அமைக்கும் பணி

 சர்வீஸ் சாலை அமைக்கும் பணி

புதுச்சேரி: மறைமலை அடிகள் சாலை, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் எதிரே சிமென்ட் சாலை அமைக்கும் பணியை நேரு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். புதுச்சேரி, மறைமலை அடிகள் சாலை, வெங்கட சுப்பு ரெட்டியார் சிலை அருகே அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, பொதுப்பணித் துறை சார்பில், ரூ.42 லட்சம் மதிப்பில்மறைமலை அடிகள் சாலை, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனைஎதிரே புதிதாக சிமென்ட் சர்வீஸ் சாலை அமைப்பதற்கான பணிகள் துவக்க விழா நேற்று நடந்தது. நேரு எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். தலைமை பொறியாளர்வீரசெல்வம், கட்டடங்கள் மற்றும் சாலைகள் மத்திய பிரிவு செயற்பொறியாளர் சீனிவாசன், இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், நாகராஜ், மின்துறை உதவி பொறியாளர் அருணகிரி, நகராட்சி உதவி பொறியாளர் பழனிராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை