உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாப்பாஞ்சாவடி கோவிலில் இன்று செடல் உற்சவம்

பாப்பாஞ்சாவடி கோவிலில் இன்று செடல் உற்சவம்

புதுச்சேரி: பாப்பாஞ்சாடி முத்துமாரியம்மன் கோவிலில், இன்று செடல் உற்சவம் நடக்கிறது. முருங்கப்பாக்கம் அடுத்த பாப்பாஞ்சாவடி புது நகரம், முத்துமாரியம்மன் கோவிலில், 17ம் ஆண்டு விழா கடந்த 22ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் 23ம் தேதி, திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று இரவு அம்மன் வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வாக இன்று மாலை 5:00 மணியளவில் செடல் உற்சவம் நடக்கிறது. இரவு சுவாமி வீதியுலா, நாளை காலை 7:00 மணியளவில், அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ