உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / செவன்த் டே அட்வெண்டிஸ்ட் பள்ளி ஆண்டு விழா

செவன்த் டே அட்வெண்டிஸ்ட் பள்ளி ஆண்டு விழா

புதுச்சேரி : புதுச்சேரி மரப்பாலம் செவன்த் டே அட்வெண்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளியில்67வது ஆண்டு விழா நடந்தது.விழாவில், செவன்த் டே அட்வெண்டிஸ்ட் மத்திய திருச்சபை போதகர் சாரோன் எபினேசர் இறைவணக்கம் வழங்கினார். பள்ளி முதல்வர் ஸ்பர்ஜன் சுகுமார் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார். தலைமை ஆசிரியர் ரமணன் வரவேற்றார்.விழாவை செவன்த் டே அட்வெண்டிஸ்ட் மண்டல கல்வி அதிகாரி பிராங்கிளின் வாட்சன் துவக்கி வைத்தார்.விழாவில், சம்பத் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, கல்வியின் அவசியத்தையும், அதனால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.தொடர்ந்து, பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகள், வகுப்பு வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள்,அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி தந்த ஆசிரியர்கள் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.விழாவில், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.பள்ளியின் பொருளாளர் அப்பலோ ஜோசப் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை