கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி
அரியாங்குப்பம்:மணவெளி தொகுதியில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை, சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். மணவெளி தொகுதி, சின்ன வீராம்பட்டினம் கிராமத்தில் யு மற்றும் எல் வடிவ கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணியை, சபாநாயகர் செல்வம் நேற்று துவக்கி வைத்தார்.அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் முன்னிலை வகித்தார். உதவி பொறியாளர் நாகராஜ், இளநிலை பொறியாளர் அகிலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.