உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சக்தி பெண்கள் மேம்பாட்டு நிகழ்ச்சி

சக்தி பெண்கள் மேம்பாட்டு நிகழ்ச்சி

புதுச்சேரி: லாஸ்பேட்டை, காஞ்சி மாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், ஸ்ரீசக்தி பெண்கள் மேம்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. நிறுவன இயக்குநர் சசி காந்த தாஷ் தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் மேரி ஜோசபின் அருணா, பெண்களின் ஆற்றல் மற்றும் திறன்களை அங்கீகரித்து, அவற்றை வளர்த்து கொள்ள வேண்டியதான் அவசியம், ‘ஸ்ரீ சக்தி’ முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். இணை பேராசிரியர் கற்பகம், பெண்கள் தங்களது இலக்குகளை அடைவதற்கு தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் ஒருவருக்கொருவர் அளிக்கும் ஆதரவு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து பேசினார். நிகழ்ச்சியில், சீனியர் எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா பங்கேற்று, ‘என் கதை, என் திறன்’ தலைப்பில் தனிப்பட்ட மற்றும் பணிசார் அனுபவங்களையும், துணிவு, விடாமுயற்சி, நேர்மை மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் மனவலிமை ஆகியவை குறித்து எடுத்துரைத்தார். மாணவர்கள் தங்கள் மீது நம்பிக்கை வைத்து, சவால்களைத் துணிவுடன் எதிர்கொண்டு, இலக்குகளை உறுதியுடன் அடைய வேண்டும் என, ஊக்கப்படுத்தினார். மனையியல் துறை உதவிப் பேராசிரியர் ரஜினி சானோலியன் வரவேற்றார். உதவிப் பேராசிரியர் அலமேலு மங்கை நன்றி கூறினார். நிறுவனத்தின் பல்வேறு துறை மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை