உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சிவபூஜை மாநாடு துவங்கியது

 சிவபூஜை மாநாடு துவங்கியது

புதுச்சேரி: தமிழக சைவநெறிக் கழகம் சார்பில், 24வது சிவ பூஜை மாநாடு புதுச்சேரியில் நடந்தது. திருச்சியை தலைமை இடமாக கொண்ட தமிழக சைவநெறிக் கழகம் சார்பில், சேக்கிழார் பெருமான் விழா, பெரிய புராணம் நுால் வெளியீட்டு விழா, சிவஸ்ரீ தத்புருஷ தேசிகர் 27வது குரு பூஜை, கழகத்தின் 24வது ஆண்டு விழா ஆகியன இணைந்த சிவபூஜை மாநாடு, முத்தியால்பேட்டை, முருகன் திருமண மண்டபத்தில் நேற்று துவங்கியது. விழாவிற்கு சேவாரத்ன சரவண பவானந்த தேசிகர் தலைமை தாங்கினார். வாமதேவ காசி முத்து தேசிகர் மாநாட்டு கொடியினை ஏற்றி வைத்து, சிறப்புரையாற்றினார். புதுச்சேரி ராமலிங்கம், பேராசிரியர்கள் முருகசாமி, சிவமாதவன், கழகத் துணைத் தலைவர் அகோர விஸ்வநாதன், தனமணி, வில்லியனுார் காமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து குருநாதர் படத்திறப்பு, சேக்கிழார் அருளிய பெரியபுராணம் நுாலினை திருச்சி கணபதி வெளியிட்டார். வாமதேவ காசிமுத்து தேசிகர் சான்றோர்களுக்கு பட்டங்களை வழங்கினார். தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவு நடந்தது. மதியம் 1:30 மணிக்கு மகேஸ்வர பூஜை நடந்தது. நாளை வரை மாநாடு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை