ஓவிய கண்காட்சி
புதுச்சேரி: ஓவியர் முனிசாமியின் 'எக்ஸ்ப்ளோ'ன் ஆப் கலர்ஸ்' தலைப்பில் தனிநபர் ஓவிய கண்காட்சி நடந்து வருகிறது.புதுச்சேரி கண்டம்பரரி ஆர்ட் கேலரி கூடத்தில் கடந்த 14ம் தேதி துவங்கி வரும் 27ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார். புதுச்சேரி மாநில கலை இலக்கிய பெருமன்ற தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.சமக்கர சிக்ஷா திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹெலன் ராணி, அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் செல்லையா, சிவக்குமார், சாந்தகுமாரி, தமிழ்நாடு கலை இலக்கிய சங்க புதுச்சேரி மாநில குழு உறுப்பினர் பாலசுப்ரமணியம், அரசு ஊழிய சம்மேளன கூட்டியக்கத்தின் துணை ஒருங்கிணைப்பாளர் முருகவேல், அரிக்கமேடு ஓவிய நிறுவனத்தின் செயலாளர் சுகுமாரன், அசிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அமைப்பு நிறுவனர் ராஜேந்திரன் வாழ்த்தி பேசினர்.தனி நபர் ஓவியக் கண்காட்சியின் சிறப்பு அம்சங்கள் மற்றும் கருப்பொருள் குறித்து ஓவியர் முனிசாமி விளக்கம் அளித்தார்.