கம்பன் அரசு பள்ளியில் திறன் மேம்பாட்டு பயிற்சி
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான இரண்டு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.புதுச்சேரி பள்ளி கல்வி இயக்கம் சார்பில் நடந்த முகாமிற்கு, பள்ளி துணை முதல்வர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். தலைமயைாசிரியை மதனசுந்தரி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக டில்லி பராக் நிறுவன நிர்வாக அதிகாரி இந்திராணி பதுாரி, பேராசிரியர் ஷாலினி, உதவி செயலாளர் ஷர்மா, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவைச் சேர்ந்த ஜெயபகத்ராஜ் ஆகியோர் 9ம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எதிர்காலத்தில் பயன்படக்கூடிய 36 வகையான திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தனர்.நிறைவு விழாவில், புதுச்சேரி கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி, பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். ஏற்பாடுகளை விரிவுரையாளர்கள் எழில்வேந்தன், கிருஷ்ணமூர்த்தி, ஜெயசீலன், மணிமாறன், பெருமாள் ஆகியோர் செய்திருந்தனர். பொறுப்பாசிரியர் லதா நன்றி கூறினார்.