உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மகளிர் தொழில்நுட்பக் கல்லுாரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி

மகளிர் தொழில்நுட்பக் கல்லுாரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி

புதுச்சேரி: காரைக்கால்மேடு அரசு மகளிர் தொழில்நுட்பக் கல்லுாரி பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறை சார்பில், இங்கிலாந்து நாட்டு தொழில்நுட்பத்தின் ராஸ்ப்பெர்ரி பை அன்ட் இன்ஜினியரிங் இனோவேஷன் தலைப்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. பயிற்சியை கல்லுாரி முதல்வர் பாபு அசோக் தொடங்கி வைத்தார். பயிற்சியில் ராஸ்ப் பெர்ரி பை, சிறிய கையடக்க மலிவான கணினியின் சென்ட்ரல் பிராசஸிங் யூனிட், மெமரி, ரியல்டைம் இன்புட் மற்றும் அவுட்புட் பின்கள், யு.எஸ்.பி., எச்.டி.எம்.ஐ., மற்றும் நெட்வொர்க் போர்ட் செய்முறையுடன் விளக்கப்பட்டது. செய்முறை பயிற்சியில் ராஸ்ப்பெர்ரி பையின் பல்வேறு தொழில்நுட்ப பயன்பாடுகளான ஐ.ஓ.டி., திட்டங்கள், ரோபோடிக்ஸ், ஹோம் ஆட்டோ மேஷன், ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள், வீடியோ கேமிங் மற்றும் மீடியா சென்டர் ஆகியவற்றின் இன்ஸ்ட்ருமெண்டேஷன் ரியல்டைம் சென்சார்ஸ்-ஐ பயன்படுத்தி மாணவிகள் சமுதாய முன்னேற்றத்திற்கு தேவையான புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை சொந்தமாக தயாரிக்க பயின்றனர். பயிற்சியை புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக இ.சி.இ., துறையின் பி.டெக். இறுதியாண்டு முதன்மை மாணவர்கள் மாதவசரண், காரைக்கால் தேசிய தொழில்நுட்ப கழக இ.சி.இ., துறையின் பி.டெக். மூன்றாமாண்டு மாணவர் ஸ்ரீவத்சன் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் இறுதியாண்டு இன்ஸ்ட்ருமெண்டெஷன் அன்ட் கன்ட்ரோல் இன்ஜினியரிங் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் மற்றும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர். ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அலுவலர் விமலன், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை