உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்கம்பியில் சிக்கிய பாம்பால் பரபரப்பு

மின்கம்பியில் சிக்கிய பாம்பால் பரபரப்பு

புதுச்சேரி: கோரிமேடு போலீஸ் பயிற்சி பள்ளி அருகே மின்கம்பியில் சிக்கி தவித்த சாரைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர். புதுச்சேரி, கோரிமேடு போலீஸ் பயிற்சி பள்ளி அருகே பாரதி வீதியில் மரத்திலிருந்து தவறிய விழுந்த சாரை பாம்பு ஒன்று மின் கம்பியில் சிக்கி தவித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த வனத்துறை ஊழியர்கள், 6 அடி நீளமுள்ள சாரை பாம்பை பத்திரமாக மீட்டு, காப்பு காட்டில் விட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை