சமூக தணிக்கை கருத்து கேட்பு கூட்டம்
புதுச்சேரி : பல்கலைக்கழக உணவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, பள்ளி கல்வி இயக்குநரகம் இணைந்து, மதிய உணவு திட்டத்தில் செயல் திறனை மதிப்பீடு செய்வதற்கு, சமூக தணிக்கை பொது கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தியது. புதுச்சேரி, காமராஜர் மணி மண்டபத்தில் நடந்த கூட்டத்தில், பி.எம்., போஷன் திட்ட துணை இயக்குநர் கொஞ்சுமொழி குமரன் முன்னிலை வகித்தார். பல்கலைக் கழக பேராசிரியர் ஹரிப்பிரியா, மாநில மதிய உணவுத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜரத்தினம், தகவல் மேலாளர் பரனிதரன், சசிகுமார் உட்பட பெற்றோர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். மதிய உணவு திட்டத்தில் நல்ல அம்சங்கள் குறித்தும், மதிய உணவில், உள்ளூர் காய்கறிகளான சங்கரவள்ளி கிழங்கு, மரவள்ளி, கருணை கிழங்கு ஆகியவற்றை சேர்க்க வேண்டும். வாரம் ஒரு முறை, கோழிக்கறி, மீன் உள்ளிட்ட இறைச்சி அடங்கிய உணவுகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என, பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.