மேலும் செய்திகள்
வேளாண் வணிக மேம்பாடு பயிற்சி
12-Dec-2025
திருக்கனுார்: திருக்கனுார் பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் ஆத்மா திட்டத்தின் கீழ் பண்ணை திட்டமிடல் மற்றும் மண்வள மேம்பாடு குறித்த பயிற்சி முகாம், செட்டிப்பட்டில் நடந்தது. இணை வேளாண் அலுவலர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன் பண்ணை திட்டமிடல் மற்றும் மண்வள மேலாண்மை குறித்து பேசினார். இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பரிய நெல் அவசியம் குறித்து விவசாயி ராதாகிருஷ்ணன் விளக்கினார். காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய வல்லுனர் விஜயகுமார் மணிலா மற்றும் உளுந்து பயிரில் பூச்சி மேலாண்மை குறித்தும், ஈஷா யோகா அதிகாரி அசோக் காடுகள் வளர்ப்பு மற்றும் மரங்களின் முக்கியத்துவம் குறித்து பேசினர். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் திருமுருகன், செயல் விளக்க உதவியாளர்கள் தங்கதுரை, பாலசுப்ரமணியன், மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி மாணவிகள் செய்திருந்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.
12-Dec-2025