மகன் மாயம் தாய் புகார்
புதுச்சேரி : மனநலம் பாதிக்கப்பட்ட மகனை காணவில்லை என தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.சேதாரப்பட்டு நாகத்தம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மதுரம்பாள். இவரது மகன் சுகுமார், 45; மனநலம் பாதித்தவர்.ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 6ம் தேதி மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற சுகுமார் வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து மதுரம்பாள் கொடுத்த புகாரின் பேரில், சேதாரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.