மேலும் செய்திகள்
சாலை அமைக்கும் பணி
12-Feb-2026
அரியாங்குப்பம்: மணவெளி தொகுதியில்,ரூ.11.67 லட்சம் மதிப்பில் துார்வாரும் பணியை, சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். மணவெளி தொகுதி, டி.என்., பாளையத்தில், நுாறு நாட்கள் வேலை திட்டத்தின் கீழ், 11.67 லட்சம் ரூபாய் மதிப்பில், பள்ள மதகு வாய்க்கால் துார் வாரும் பணியை சபாநாயகர் செல்வம் நேற்று துவக்கி வைத்தார். தொடர்ந்து, அதேப் பகுதியில் உள்ள மேட்டு மதகு மற்றும் துாக்கு பாலம் ஏறி வாய்க்கால் துார் வாரும் பணியை, சபாநாயகர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அதிகாரி சவுந்தரி, உதவிப்பொறியாளர் ராமன், இளநிலைப் பொறியாளர் சிவப்பிரகாசம் உட்பட பலர் உடனிருந்தனர்.
12-Feb-2026