உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவர்கள் சான்றிதழ் பெற சனிக்கிழமைகளில் சிறப்பு ஏற்பாடு

மாணவர்கள் சான்றிதழ் பெற சனிக்கிழமைகளில் சிறப்பு ஏற்பாடு

புதுச்சேரி: மாணவர்கள் வருவாய்த்துறை சான்றிதழ் பெற சனிக்கிழமைகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் குலோத்துங்கன் செய்திக்குறிப்பு: வரும் 2025-26ம் கல்வியாண்டில் பள்ளி, கல்லுாரி சேர்க்கை பருவத்தை முன்னிட்டு குடியிருப்பு, வருமானம் மற்றும் ஜாதி சான்றிதழ்களுக்கு விண்ணப்பங்கள் அதிகமாக பெறப்பட்டு வருகிறது. மாணவர்கள், பெற்றோர்கள் தாசில்தார் அலுவலகங்களில் சான்றிதழ்களை பெற சிரமப்பட்டு வருகின்றனர்.மாணவர்களின் விண்ணப்பங்கள் சரியான நேரத்தில் பரிசீலிக்கப்பட்டு, தேவையான சான்றதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய, புதுச்சேரியில் உள்ள அனைத்து தாசில்தார் அலுவலகங்கள், மாணவர்களுக்காக மட்டும் வரும் 24, 31 மற்றும் ம் தேதி ஆகிய சனிக்கிழமைகளில் செயல்படும். இந்த நாட்களில் தாசில்தார் அலுவலகங்களில் விண்ணப்பதாரர்களுக்கான இருக்கை, குடிநீர் வசதிகளை ஏற்பாடு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் நலனுக்காக, கடைசி நேரத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள், பெற்றோர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை