உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கல்வி நிறுவன வாகனங்களை ஆய்வு செய்ய சிறப்பு முகாம்

கல்வி நிறுவன வாகனங்களை ஆய்வு செய்ய சிறப்பு முகாம்

புதுச்சேரி: போக்குவரத்துத் துறையின் மூலம் கல்வி நிறுவன வாகனங்களை ஆய்வு செய்ய சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.துணை போக்குவரத்து ஆணையர் குமரன் செய்திக்குறிப்பு: மாணவ, மாணவியரின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, மோட்டார் வாகன சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறைகளை அமல்படுத்தும் நோக்கில் புதுச்சேரியில் உள்ள கல்வி நிறுவனங்களின் வாகனங்களை ஆய்வு செய்ய சிறப்பு முகாம் 31 மற்றும் 1ம் தேதிகளில் மேட்டுப்பாளையம் சரக்கு ஊர்தி முனையத்தில் நடக்கிறது.முகாமில் அனைத்து கல்வி நிறுவனங்களை சார்ந்த 900 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன. இதற்கென போக்குவரத்துத் துறையில் வாகன ஆய்வாளர்கள், உதவி வாகன ஆய்வாளர்கள் தலைமையில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.முகாமில், வாகனத்தின் தகுதிச் சான்றிதழ், காப்பீடு, பர்மிட், புதுப்பிக்கப்பட்ட முதல் உதவி பெட்டி, தீ அணைப்புக் கருவி, ஜன்னல்களில் கிடைமட்ட கிரில்கள், அவசர காலத்தில் வெளியேறும் கதவு, பஸ் கதவுகளில் உறுதியான பூட்டுகள், வேக கட்டுபாட்டு கருவி, ஜி.பி.எஸ், புகையில்லா சான்றிதழ் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படும்.தகுதியுள்ள வாகனங்களுக்கு சான்றிதழ் அளித்து வாகனத்தின் முகப்பில் ஒட்டப்படும். அந்த வாகனங்கள் மட்டுமே மாணவர்களுடன் சாலையில் பயணிக்க அனுமதிக்கப்படும். மீறினால் உடனுக்குடன் பறிமுதல் செய்து தகுந்த குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோல், காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பகுதிகளிலும் சிறப்பு ஆய்வு முகாம் நடக்கிறது.அனைத்து கல்வி மற்றும் வாகன உரிமையாளர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தங்கள் வாகனங்களை ஆய்விற்கு உட்படுத்தி மாணவ, மணவியரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை