சிறப்பு மருத்துவ கருத்தரங்கம்
புதுச்சேரி : இந்திய மெடிக்கல் அசோசியேஷன் புதுச்சேரி கிளை சார்பில், சிறப்பு மருத்துவ கருத்தரங்கம் நடந்தது. புதுச்சேரி அண்ணா சலையில் உள்ள ஆனந்தா இன் ஓட்டலில் நடந்த கருத்தரங்கிற்கு, புதுச்சேரி கிளை தலைவர் சுதாகர் தலைமை தாங்கினார். செயலாளர் சீனுவாசன் முன்னிலை வகித்தார். சென்னையில் இருந்து வந்த சிறப்பு மருத்துவர்கள் நுாருல் அமீன், நிஜல்சிம்ஸ், வில்சன் ஆகியோர் அறுவை சிகிச்சை தொடர்பான சிறப்புரை நிகழ்த்தினர். தொடர்ந்து, பல்வேறு நோய்கள் குறித்து, அவற்றில் இருந்து பாதுகாப்பது மற்றும் அறுவை சிகிச்சை மூலம் நோய்களை சரி செய்வது பற்றி சிறப்பு மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர். கருத்தரங்கில் தமிழகம், புதுச்சேரி உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டனர்.